மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் பகத்பாசில். தமிழ் படத்திலும் தனது இல்பான நடிப்பால் முத்திரை பதித்து வருகிறார். வேலைக்காரன் , சூப்பர் டீலக்ஸ் , மாமன்னன் ஆகிய படங்களில் அவரது நடிப்பு பேசும்படி இருந்தது.
ADHD பாதிப்பு
புஷ்பா படத்திலும் மிரட்டிஇருப்பார். அவரை நடிப்பு அரக்கனாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மாமன்னன் படத்தில் அவர் ஆதிக்க நபராக அப்படியே வாழ்ந்து இருப்பான். சமீபத்தில் வெளியான ஆவேஷம் படத்தில் இல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தற்போது அந்த படம் சூப்பர்ஹிட் ஆகி உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில்பங்கேற்று பகத்பாசில் பேசும் போது தனக்கு ஏ.டி,எச்.டி என்கிற கவனக்குறைவு பாதிப்பு தனது 41 வயதில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நடிப்பில் கலக்கி வரும் அவருக்கு இப்படி ஒரு பாதிப்பு இருக்கிறதா? என்று ரசிகர்கள் அடைந்து உள்ளனர்.
ஏ.டி.எச்.டி (ADHD) என்றால் என்ன?
இது ஒரு நோய் என்று அறியப்பட்டாலும் உண்மையில் ஏ.டி.எச்.டி(Attention deficit/hyperactivity disorder) என்பது மூளையின் நரம்புகளில் ஏற்படும் ஒரு மாற்றமே, சிறிய குறைபாடே ஆகும்.
இந்த நரம்பியல் மாற்றம் ஏற்பட்டவர்களால் ஒரே விஷயத்தில் அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது. மேலும் எளிதில் திசைத்திரும்பக் கூடிய தன்மையுடையவர்களாக இருப்பார்கள். அதிக சுட்டித்தனம், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை, அவசர குணம் போன்ற பொதுவான அறிகுறிகள் இயல்பாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஞாபக மறதி
இந்த நிலை இருப்பதை குழந்தை பருவத்திலேயே அடையாளம் கண்டுகொண்டால் சில பயிற்சிகளின் உதவியால் எளிதில் குணப்படுத்திவிடலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் ஞாபக மறதி ஏற்பட்டு தினசரி வேலைகளை செய்வதில் சிரமப்படுவார்கள்.