இதேபோன்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், வி.கே.சசிகலா, நடிகர் சரத்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் சிவக்குமார், பிரபு, சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், விஜய்யும் பாரதிராஜாவின் இல்லத்துக்கு நேரில் சென்று மாலை அணிவித்து மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.