நடிகர் ரஜினிகாந்த் 173-வது திரைப்படம்: இயக்குநர் சிபி சக்ரவர்த்தி விலகல்? – Kumudam

Spread the love

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர்-2 திரைப்டத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்து வருகிறார். இந்த படத்தை முடித்து கொண்டு ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க உள்ளார். கமல் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர் நேஷனல் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. 

ரஜினியின் 173-வது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருந்த காரணத்தால், படத்தை இயக்குவதில் இருந்து விலகியதாக தெரிகிறது. இந்த நிலையில் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி ரஜினியின் 173-வது திரைப்படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். இதற்கான முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தபோதே படத்தின் அறிவிப்பு விடியோவும் அதில் இடம்பெற்ற பின்னணி இசையும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் இப்படத்திலிருந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தியை மாற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்குப் பதிலாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ரஜினி 173 படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *