நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

Spread the love

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 46.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

சென்னையில் கௌதம் வாசுதேவ் மேனன் – தர்ஷனின் ‘காட்ஜில்லா’ படப்பிடிப்பில் இருந்தபோது நீர்ச்சத்து குறைபாடு, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் மயக்கமடைந்தார்.

உடனே அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சுமார் 8:30 மணியளவில் உயிரிழந்தார்.

மருத்துவ அறிக்கை

ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்த நிலையில், மீண்டும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தார்.

இவரது மறைவு குறித்து அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரோபோ சங்கரின் உடல் இன்றிரவு அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமாகி, பிரபலமாக அறியப்பட்ட ரோபோ சங்கர், 2007 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான தீபாவளி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமானார். 

அதன்பின், வெள்ளித்திரையிலும் அசத்தினார். விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுஷின் மாரி உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

Actor Robo Shankar passed away!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *