நடிகர் விஜய்க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து

Seeamn And Vija
Spread the love

நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குநாம்தமிழர் கட்சியின தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுஉள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

Vijay

தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு, எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி!

காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள,

எனதருமை இளவல்,
எனது அன்புத்தளபதி,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்,
என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!

Aa

இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.

இதையும் படியுங்கள்:

கள்ளச்சாராய பலி விவகாரத்தில் சி.பி.ஐ.விசாரணை-எடப்பாடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *