நடிகர் விஜய் கட்சி கொடியில் இருந்து யானை சின்னத்தை அகற்ற கோரி புகார்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் பகுஜன் சமாஜ் கட்சி மனு | BSP petition to remove elephant from TVK flag

1302029.jpg
Spread the love

சென்னை: நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை அகற்ற கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் பகுஜன் சமாஜ் கட்சி மனு அளித்துள்ளது.

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை சமீபத்தில் வெளியிட்டார். மஞ்சள்,கருஞ்சிவப்பு நிறங்கள் அடங்கியஅந்த கொடியில், இரண்டு யானைகள் மற்றும் நடுவில் வாகை பூ இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், தங்கள் கட்சியின் சின்னமான யானையை விஜய் பயன்படுத்தியதற்கு, பகுஜன் சமாஜ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதன்தொடர்ச்சியாக நேற்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலக செயலாளர் டி.தமிழ்மதி இதுகுறித்து புகார் மனு அளித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நடிகர் விஜய் அறிமுகம் செய்தகொடியில், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அங்கீகாரம் பெற்றயானை சின்னத்தை பொறித்துள்ளார். இதுகுறித்து, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுஅளித்துள்ளோம். இந்திய குடியரசுகட்சியின் சின்னமாக இருந்தநிலையில் அக்கட்சி அங்கீகாரம் இழந்த நிலையில், அதை பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமாக கன்ஷிராம் பெற்றார்.

ஒரு அரசியல் கட்சியின் பிரதான சின்னமாக உள்ள யானையை, மற்றொரு கட்சி எந்த வடிவிலும் பயன்படுத்தக் கூடாது. ஆனால், விஜய் உள்நோக்கத்துடன் பயன்படுத்தியுள்ளார். இதை நீக்கவில்லை என்றால் மிகப்பெரிய சட்டப் போராட்டத்தை பகுஜன் சமாஜ் கட்சி மேற்கொள்ளும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் கருத்து கேட்கும்போது நாங்கள் தெரிவிப்போம் என தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தல் சின்னம் ஒதுக்கீட்டை பொறுத்தவரை, தேசிய கட்சிக்கு ஒதுக்கப்படும் சின்னம் அந்த கட்சிக்கு மட்டுமே, வேறு யாருக்கும் ஒதுக்கப்படாது. மாநில கட்சியாக இருக்கும்பட்சத்தில் அந்த மாநிலத்திலும், அந்த கட்சி போட்டியிடும் மாநிலத்திலும் தனிச்சின்னம் ஒதுக்கப்படும்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, தேர்தல் துறைஅதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தேர்தல் ஆணைய விதியில், ஒருகட்சியின் சின்னத்தை மற்ற கட்சிபயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது. ஆனால், ஒரு கட்சியின் சின்னத்தை மற்றொரு கட்சி தனது கொடியில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நேரடியான விதிகள் இல்லை. எனவே, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் முறையிடும்பட்சத்தில் புதிய விதிகள் உருவாக்கப்படலாம்’’ என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *