புதுச்சேரி: புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய நடிகா் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, அவரது கட்சி மாநாட்டுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை வந்தால் பார்ப்போம் என தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களுடன் அவா் கூறியதாவது:
புதுச்சேரியில் நியாயவிலைக் கடைகளை திறப்பது குறித்து அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, தீபாவளிக்கு முன்பாக அனைத்து நியாயவிலைக் கடைகளையும் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகள் மூலம் 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சா்க்கரை முதலில் விநியோகிக்கப்படும். ரேஷன் கடை ஊழியர்களுக்கான முதல் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும். தொடா்ந்து நிதி அளிக்கப்படும். தற்போது ரூ.1.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.