இந்த நிலையில் எர்ணாகுளம் பிரின்சிபல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஹனி எம். வர்க்கீஸ், குற்றவாளிகளுக்கான தண்டனையை இன்று மாலை அறிவித்தார். அதில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 6 குற்றவாளிகளுக்கும் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அபராதத் தொகையை செலுத்த தவறினால், மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட நடிகைக்கு நிச்சயதார்த்தத்தின் போது போடப்பட்ட மோதிரம், விசாரணையின் ஒருபகுதியாக கோர்ட் கஸ்டடியில் இருந்தது. அந்த மோதிரத்தை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. நடிகையின் மோதிரம் தெளிவாகத் தெரியும் வகையில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.

வீடியோவை பகிர்ந்ததற்காக ஐ.டி. ஆக்ட் படி பல்சர் சுனிக்கு கூடுதலாக 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் சேர்த்தே இந்த 5 ஆண்டு சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குற்றம் 2017-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போதே பல்சர் சுனி கைது செய்யப்பட்டு ஏழரை ஆண்டுகளும் 29 நாட்களும் சிறையில் இருந்தார். எனவே, பல்சர் சுனி இனி மேலும் 12 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.