கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி படபிடிப்பு முடித்து மாலை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். காரில் வைத்தே பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன் அதை வீடியோவாக பதிவுசெய்து, வீடியோவை பரப்பவும் செய்தனர்.
8வது குற்றவாளி
நாட்டையே உலுக்கிய இந்த பாலியல் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நடிகையின் கார் டிரைவராக இருந்த பல்சர் சுனி என்ற சுனில் குமார் முதலில் கைது செய்யப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில் நடிகர் திலீபுக்கும் இதில் தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. மொத்தம் 10 பேர் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதில் முதலில் பல்சர் சுனியும், 8-வது இடத்தில் நடிகர் திலீப் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்த வழக்கின் ஆரம்பகட்டத்தில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் இரண்டரை மாதங்கள் சிறையில் இருந்த திலீப் ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் பிரின்ஸிபல் செசன்ஸ் கோர்டில் நடைபெற்று வரும் நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி
நடிகையை அவமானப்படுத்தும் விதமாக பாலியல் தொல்லை அளித்து வீடியோ எடுக்கும் நோக்கில் இந்த பாலியல் குற்றம் நடந்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. துபாயில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் திலீப், நடிகை காவியாவுடன் மிகவும் நெருங்கி பழகியுள்ளார். அதுபற்றி திலீபின் முதல் மனைவி மஞ்சுவாரியரிடம் பிரபல நடிகை கூறியிருக்கிறர். இதையடுத்து மஞ்சுவாரியாருக்கும் திலீபிற்கும் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு விவகாரத்தானது.
இதையடுத்து நடிகர் திலீப், நடிகை காவியா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். நடிகை மஞ்சு வாரியரிடம் நட்பாக இருந்த பிரபல நடிகை மீது ஏற்பட்ட கோபத்தில் அவரை பழிவாங்கவே பல்சர் சுனி மூலம் பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றியதாக போலீஸ் விசாரணையில் கூறப்பட்டது.