நடிகை சரோஜா தேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று(ஜூலை 15) நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வீட்டில் வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்து வந்த சரோஜா தேவி, உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று(ஜூலை 14) காலமானார்.
தமிழ், கன்னடம் உள்பட 4 மொழிகளில், சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை சரோஜா தேவி.
பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிப் படங்களில் நடித்து, அபிநய சரஸ்வதி என்ற பட்டம் பெற்றவருமான சரோஜா தேவியின் உடலுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.