பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியாவிடம் அமலாக்கத்துறை வியாழக்கிழமை குவாஹத்தியில் விசாரணை நடத்தியது.
சட்டவிரோத ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களுடன் தொடர்புடைய சூதாட்ட செயலிக்கான விளம்பரத்தில் நடித்தாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக, நடிகை தமன்னாவுக்கு, அஸ்ஸாமின் குவாஹாத்தியில் உள்ள அமலாக்க இயக்குநரகம் வியாழக்கிழமை சம்மன் அனுப்பியது.
இந்தச் செயலியை விளம்பரப்படுத்துவதற்காக இன்னும் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமலாக்கத்துறையின் முன் ஆஜராவதற்காக அவர் தனது தாயுடன் குவஹாத்திக்குச் சென்றார்.