நடிகை ப்ரியங்கா சோப்ராவின் ‘ice dunk’ சீக்ரெட்… சருமத்தைப் பளபளப்பாக்குமா? | Actress Priyanka Chopra’s ‘Ice Dunk’ secret… Will it make the skin glow?

Spread the love

மேக்கப் போடுவதற்கு முன்போ அல்லது காலையில் தூங்கி எழுந்தவுடனோ முகத்தை ஐஸ் தண்ணீரில் கழுவும்போது, அது சருமத்திற்குப் புத்துணர்ச்சியையும், ஆரோக்கியமான பொலிவையும்  உடனடியாகத் தருகிறது. பருக்கள் உள்ள சருமத்திற்கு (Acne-prone skin), இது தற்காலிகமாக எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால், இது அந்தத் தருணத்திற்கு மட்டுமே பலன் தரக்கூடியது என்பதை கவனத்தில் கொள்ளவும்.  நீண்டகால அடிப்படையில் இது சருமத்திலோ அல்லது ஆரோக்கியத்திலோ பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது. உடலின் செயல்பாடுகளையோ அல்லது சருமப் பிரச்னைகளுக்கான அடிப்படைக் காரணங்களையோ மாற்றாது.

இதில் உள்ள பாதங்களையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.  நமது சருமத்தின் பாதுகாப்பு அடுக்கான  ‘ஸ்கின் பேரியர் லேயர்’ (Skin barrier layer) இதனால் கடுமையாகப் பாதிக்கப்படலாம். சருமத்தில் அதிகப்படியான வறட்சியையும் (Dryness) மற்றும் தோல் உரியும் தன்மையையும் (Flakiness) இது உண்டாக்கக்கூடும்.

முகம் சிவந்து காணப்படும்  'ரோசேஷியா' (Rosacea) போன்ற  சருமப் பிரச்னை உள்ளவர்களுக்கு, இந்த ஐஸ்வாட்டர் சிகிச்சை எடுப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

முகம் சிவந்து காணப்படும் ‘ரோசேஷியா’ (Rosacea) போன்ற சருமப் பிரச்னை உள்ளவர்களுக்கு, இந்த ஐஸ்வாட்டர் சிகிச்சை எடுப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

முகம் சிவந்து காணப்படும்  ‘ரோசேஷியா’ (Rosacea) போன்ற  சருமப் பிரச்னை உள்ளவர்களுக்கு, இந்த ஐஸ்வாட்டர் சிகிச்சை எடுப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கும். பிக்மென்ட்டேஷன் எனப்படும் மங்கு பிரச்னை இருப்பவர்களுக்கு, இது மெலனோசைட்டுகளை (Melanocytes) தூண்டி சருமத்தை மேலும் கருமையாக்க வாய்ப்புள்ளது.

நமது முகத்தின்  சருமப் பகுதியில் நுண்ணிய துவாரங்கள் இருக்கும். சைனஸ் (Sinusitis) பாதிப்பு உள்ளவர்கள் திடீரென இப்படி அதீத குளிர்ச்சியான ஐஸ் தண்ணீரைப் பயன்படுத்தும்போது அது அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.  சைனஸ் பாதிப்பைத் தீவிரப்படுத்தலாம். தலைபாரத்தை ஏற்படுத்தலாம். எனவே, சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆவதையோ, பிரபலங்கள் செய்வதைப் பார்த்தோ, இத்தகைய சிகிச்சைகளை கண்மூடித்தனமாக எல்லோரும் பின்பற்றக் கூடாது.  எப்போதாவது ஒருமுறை மேக்கப் போடுவதற்கு முன்பு மட்டும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து செய்வது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *