இந்த நிலையில், பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ரன்யா ராவ் இன்று(மார்ச் 10) ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் மார்ச் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்படுவார். எனினும், ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு செவ்வாய்க்கிழமை(மார்ச் 11) விசாரணைக்கு வருகிறது.