நம் அனைவருக்குமே, நம் வாழ்வின் ஏதாவதொரு கட்டத்தில், வாழ்தலின் மீதான நம்பிக்கையும் பிடிப்பும் மிக அதிகமாக இருந்திருக்கும். அப்படியான நேரத்தில், `என்ன ஆனாலும் சரிப்பா, வாழ்ந்து பார்த்துடறேன்” என உற்சாகத்துடன் சொல்லி, வழக்கத்தைவிடவும் அதிக புத்துணர்ச்சியோடு செயல்பட்டிருப்போம்.
இதேபோல, காரணமே இல்லாமல், `என்ன வாழ்க்கைடா இது’ எனத் துவண்டுபோவது, வாழ்வின் மீதுள்ள பிடிப்பு மொத்தமும் போய், `இனி என்ன செய்யுறது’ எனப் புரியாமல் திகைத்து நிற்பது, அடுத்தது என்ன என்ற கேள்வியும், அது தரும் பயங்களும்கூட இயல்பானதுதான்.
இது தற்காலிகமானதும்கூட. குறிப்பாக, நடுத்தர வயதில் இந்த மனநிலை மாற்றங்கள் அதிகம் நிகழும். இதுதான் மிட்லைஃப் க்ரைசிஸ். இது குறித்து, மனநல மருத்துவர் வசந்திடம் பேசினோம்.