
இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடி எக்ஸ் தளத்தில் “நன்றி திருவனந்தபுரம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜ.க-என்.டி.ஏ கூட்டணிக்கு பெரும்பான்மை அளித்திருப்பது கேரள அரசியலில் முக்கியமான தருணமாகும். மாநிலத்தின் வளர்ச்சி, தேவைகளை பா.ஜ.க-வால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளை நம்பி கேரள மக்கள் சோர்ந்துவிட்டனர். பா.ஜ.க கூட்டணியிடம் இருந்து மக்கள் நல்லாட்சியை எதிர்பார்க்கிறார்கள்கள்.
துடிப்புமிக்க நகரத்துக்கான வளர்ச்சிக்கு பா.ஜ.க துணை நிற்கும். என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டிசம்பர் 21-ம் தேதி முதல் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவிகளை ஏற்றுக் கொள்ள உள்ளனர்.