நம்பிக்கை விருதுகள் 2025: "நெகட்டிவா ஒரு பயங்கர வில்லனா…" – மனம் திறந்த காளி வெங்கட்

Spread the love

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருது 2025’-ல் `யதார்த்த திரைக்கலைஞன் விருது’ பெற்ற நடிகர் காளி வெங்கட், விழா மேடையில் தொகுப்பாளர்களுடன் உரையாடியது கலகலப்பாக இருந்தது.

விருது வழங்கிய விகடன் குழுமத்துக்கு நன்றி தெரிவித்து பேச ஆரம்பித்த காளி வெங்கட், “என்னுடைய யதார்த்த திரைக்கலைஞன் விருதுக்குக் காரணமான நிறைய இயக்குநர்கள் இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் இந்த மேடை பத்தாதுன்னு நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு 150 கிட்ட வந்துரும். ஆனா, இப்போதைக்கு இங்க இரண்டு இயக்குநர்கள் வந்திருக்காங்க.

இயக்குநர் பிரேம் - நடிகர் காளி வெங்கட்
இயக்குநர் பிரேம் – நடிகர் காளி வெங்கட்

அவங்களோட இந்த விருதைப் பகிர்ந்துக்கணும்னு ஆசைப்படுறேன்’’ என்று சொன்ன காளி வெங்கட், `மெட்ராஸ் மேட்னி’ படத்தின் இயக்குநர் ராஜவேல், `ஹவுஸ் மேட்’ திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திகேயன் மணி ஆகிய இருவரையும் மேடைக்கு அழைத்துக் கொண்டார்.

“என் கையில் இருக்கும் இந்த விருதுக்காக என்னைவிட என் அப்பாதான் ரொம்ப சந்தோஷப்படுவார். ஏன்னா, இந்த விருதுக்கு பெயரிலேயே நம்பிக்கை வருது. என்னைவிட என் மேல் அதிகமாக நம்பிக்கை வெச்சவர் எங்க அப்பாதான். எங்க அப்பா இப்போ இருந்திருந்தா, பூரிப்படைஞ்சிருப்பார்.

படத்தோட போஸ்டர்கள்ல என்னோட படம் வரும்போது அதுல நம்ம முகம் தெரிஞ்சிருந்தா, டீக்கடையில் எடுத்து வெச்சிருந்து அதை எல்லார்கிட்டயும் காமிச்சு பெருமைப்பட்டுக்கொண்டேயிருப்பார். எனக்கு கோபம் வருகிற அளவுக்கு என் மேல நம்பிக்கை வெச்சிருப்பார்’’ என்று தன் அப்பாவின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்

தொடர்ந்து தொகுப்பாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த காளி வெங்கட்“வில்லனா, நெகட்டிவா ஒரு பயங்கர ஸ்ட்ராங்கான ரோல் நடிக்க ஆசை இருக்கு’’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *