நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியைக் கையாளத் தெரியவில்லை: டிடிவி தினகரன்

dinamani2F2025 09
Spread the love

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது மற்றும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலா் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் கூட்டணியில் அமமுக இருக்கும். அண்ணாமலைதான், பாஜகவுடன் அமமுகவை கூட்டணி அமைக்க முழு முயற்சி எடுத்தவர். அவரால்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம், ஒன்றாக செயல்பட்டோம். அண்ணாமலை தலைவராக இருந்தவரை கூட்டணியை நல்ல முறையில் கொண்டு சென்றார். ஓ. பன்னீர்செல்வமும், நானும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்தோம்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்காதது குறித்து நயினார் நாகேந்திரன் அளித்த பதில் ஆணவமானது. நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை சரியாகக் கையாளத் தெரியவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பாஜக எப்படி சொல்ல முடியும்? கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு பாஜக காரணமல்ல, தொண்டர்களின் முடிவால் வெளியேறினோம். நிதானமாக எடுத்த முடிவுதான் இது என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 2026 தேர்தலில் எங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. மூப்பனார் நினைவிட நிகழ்ச்சிக்கு ஜி.கே. வாசன் அழைப்பு விடுத்திருந்தாரே தவிர, வேறு யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. தேஜ கூட்டணியில் அமமுக மீண்டும் இணைய வேண்டும் என்றால், ஒரு நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும். அது என்னவென்றால், எதைச் செய்ய வேண்டுமோ, அதை செய்யுங்கள் என பாஜக கூட்டணிக்கு மறைமுகமாக நிபந்தனை விதித்திருக்கிறார் டிடிவி தினகரன்.

தினகரன் பேசும்போது, அண்ணன் பழனிசாமி என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எடப்பாடி பழனிசாமி அண்ணன்தான் என்று பதிலளித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *