இந்த நிலையில், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய வெங்கடேசன், நலமாக இருக்கிறேன். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
நலமாக இருக்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் எனது உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் உடனடியாகத் தோழர்கள் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
என்னை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நலன் சீராக இருப்பதை உறுதி செய்தனர்.
இந்த செய்தியை அறிந்து அக்கறையுடன் அலைபேசி வாயிலாக நலம் விசாரித்த முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்த அமைச்சர்கள் பொன்முடி, சி.வெ. கணேசன், முன்னாள் எம்.பி. கௌதம சிகாமணி, அன்னியூர் சிவா எம்எல்ஏ மற்றும் விழுப்புரம் ஆட்சியர் தொலைபேசியில் அழைத்த அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழர்கள் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.