நல்லகண்ணு:“உடல், பொருள், ஆவி என அனைத்தையுமே அர்ப்பணித்துவிட்டார்” – நடிகர் மன்சூர் அலிகான் | Nallakannu: “He has dedicated everything, body, material, and spirit” – Actor Mansoor Ali Khan

Spread the love

கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஐயா நல்லகண்ணு போன்ற ஒரு எளிய தலைவரை இப்போது நம்மால் பார்க்க முடிவதில்லை. ஐயா மறைந்துவிடவில்லை. நல்லகண்ணு அவர்கள் எரிக்கப்படப் போவதுமில்லை, புதைக்கப்படப் போவதுமில்லை. அவர் தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையுமே இந்த மக்களுக்காக அர்ப்பணித்துவிட்டார். அவர் விதைத்த விதைகள் இப்போது மாணவ, மாணவிகளாக, ஆயிரக்கணக்கான “இளம் நல்லகண்ணுகளாக’ தமிழகமெங்கும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய அரசியல் சூழல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவனிடம் இந்த நாடு அடகு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவன் சொல்லித்தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவல நிலையில் இருக்கிறோம் (இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்). ஜனநாயகம் என்பது பிணநாயகமாக மாறிப்போன இக்காலகட்டம் இப்படியே தொடர்ந்துவிடாது.

மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான்

இந்த அநீதிகளை ஐயா நல்லகண்ணுவின் ஆன்மா மன்னிக்காது. ஆயிரக்கணக்கான இளைஞர்களை உருவாக்கி, நாளைய தமிழகத்தில் ஒரு புரட்சியை அவர் மறைவு நிச்சயம் வெடிக்கச் செய்யும். உண்மையான ஜனநாயகம் மலரும்.

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்’ என்பதற்கு இணங்க, இந்த மண்ணுலகில் ஒப்பற்ற வாழ்க்கை வாழ்ந்த ஐயா நல்லகண்ணு அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். செம்மாந்த இளைஞர்கள் மூலம் உண்மையான ஜனநாயகத்தைப் படைப்பதற்காகவே இந்த மாத்தமிழன் மறைந்திருக்கிறார் என்ற நம்பிக்கையோடு அவருக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *