நல்லகண்ணு:“பணத்தாலும் ஐயாவை வாங்க முடியவில்லை” – நடிகர் பார்த்திபன் | Nallakannu: “Even money couldn’t buy sir” – Actor Parthiban

Spread the love

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று பிற்பகல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் தியாகராயர் நகரில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

இன்று மாலை 4 மணியளவில் அரச மரியாதையுடன் அவரின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுப் படிப்புக்காக ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை முதலே அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் நடிகர் பார்த்திபன், நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “இன்னும் மறையாத ஐயா நல்லகண்ணு. கண் நன்றாக இருந்தால் பார்வை நன்றாக இருக்கும். ஐயா நல்லகண்ணுவுக்கு வாழ்வியலில் நல்ல பார்வை கொண்ட, நேர்மையான, உண்மையான, தூய்மையான என எல்லா வார்த்தைகளுக்கும் உதாரணமானவர்.

நல்லகண்ணு

நல்லகண்ணு

இன்று ஐயாவுக்கு மாலை, மரியாதை செய்த அரசியல்வாதிகளில் சிலரைத் தவிர அவரைப் பின்பற்றுபவர்கள் யாராவது இருக்கிறார்களா? ஐயாவைச் சிலமுறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். என் பெரும்பாலான படங்களில் சிவப்பு சிந்தனை பற்றிய சிந்தனையைப் பேசியிருப்பேன். அதையெல்லாம் அவர் பாராட்டியிருக்கிறார். இந்த உலகில் உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்வதே அரசியல். ஐயா ஒரு சிறந்த அரசியல்வாதி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *