அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் சிறப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் நல்லகண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் மீண்டும் பொருத்தப்பட்டது.
இந்த நிலையில், நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நேற்று செல்போனில் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், சேகர் பாபு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனிடையே, நல்லகண்ணுவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.