‘நல்லா வரணும்…வெற்றி பெறணும்…’ – விஜய்க்கு வாழ்த்து சொன்ன ரங்கசாமி! | may you be successful Rangasamy congratulates Vijay

1371894
Spread the love

புதுச்சேரி: தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர் விஜய்க்கு, “வெற்றி பெற வேண்டும்” என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து கூறியுள்ளார்.

முதல்வர் ரங்கசாமிக்கும், விஜய்க்கும் நெருக்கமான நட்பு உண்டு. விஜய்யின் தவெக முதல் மாநில மாநாடு நடந்தபோது முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். அந்த மாநாட்டை தொலைக்காட்சியில் பார்த்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும் விஜய்யுடன் முதல்வர் ரங்கசாமி நெருக்கம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், இன்று (ஆக.4) புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பலரும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யும் முதல்வர் ரங்கசாமிக்கு தொலைபேசி மூலம் இன்று மதியம் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது முதல்வர் ரங்கசாமி, “வணக்கம்பா-வாழ்த்துக்கள்- நல்லாயிருக்கணும்- வளமாக இருக்கணும். நல்லா வரணும். நல்லா பண்ணுங்க. வெற்றி பெறணும், நல்லது செய்துட்டு வாங்க.” என விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *