"நல்லா விளையாடியும் இந்திய அணியில என் பேரு இல்லை; வேதனையா இருந்துச்சு, ஆனா.!"- இஷான் கிஷன்

Spread the love

சையத் முஷ்டாக் அலி டிராபியின் இறுதிப்போட்டி நேற்று (டிச.18) புனேவில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் ஜார்கண்ட், ஹரியானா அணிகள் மோதின. இதில் ஹரியானாவை மடக்கி ஜார்கண்ட் அணி வெற்றி வாகையை சூடியது.

குறிப்பாக 49 பந்துகளில் சதம் விளாசி, ஜார்க்கண்ட் அணிக்கு சாம்பியன் பட்டம் வெல்ல கேப்டன் இஷான் கிஷன் முக்கிய பங்காற்றினார்.

இஷான் கிஷன்
இஷான் கிஷன்

அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இஷான் கிஷன், ” நான் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போதும் இந்திய அணியில் என் பெயர் இல்லாதது, எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது.

ஆனால், எனக்கு நானே ஒரு விஷயத்தை சொல்லிக்கொண்டேன். இந்த ஆட்டம் போதாது போல, இன்னும் சிறப்பாக ஆட வேண்டும், அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

விரக்தி அடைவது நம்மை ஒரு படி கீழே தான் இறக்கும். கடினமாக உழைத்து நம்மை நாமே நம்புவது தான் முக்கியம். இளம் வீரர்களுக்கு நான் சொல்வதும் இதுதான்” என்று கூறியிருக்கிறார்.

2026 டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்குமா? என்ற கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த அவர், “அணியில் பெயர் இல்லை என்றால் வருத்தம் வரும் தான்.

ஆனால் நான் இப்போது எதையும் எதிர்பார்க்கவில்லை. என் வேலை தொடர்ந்து சிறப்பாக ஆடுவது மட்டும் தான்” என்று தெரிவித்திருக்கிறார்.

இஷான் கிஷன்
இஷான் கிஷன்

தொடர்ந்து பேசிய அவர், ” என் கேப்டன்சியில் உள்நாட்டு தொடரில் கோப்பை வெல்வது இதுவே முதல்முறை.

என் திறமையை நிரூபித்த தருணம் இது. அதனால் இதுதான் என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம்” என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார் இஷான் கிஷன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *