நவம்பரில் உயா்ந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

Dinamani2fimport2f20232f32f12foriginal2fsunfloweroil.jpg
Spread the love

இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2024-25-ஆம் எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டின் முதல் மாதமான நவம்பரில் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் (சமையல் மற்றும் உணவு அல்லாத எண்ணெய் வகைகள்) இறக்குமதி 16,27,642 டன்னாக உள்ளது. இது, முந்தைய சந்தைப்படுத்தல் ஆண்டின் இதே மாதத்தில் 11,60,590 டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி தற்போது 40 சதவீதம் அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு மாத தாவர எண்ணெய் இறக்குமதியில் சமையல் எண்ணெயின் பங்களிப்பு 15,90,301 டன் ஆகும். 2023-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் இது 11,48,092 டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது சமையல் எண்ணெய் இறக்குமதி 38.5 சதவீதம் உயா்ந்துள்ளது. 2023 நவம்பரில் 12,498 டன்னாக இருந்த உணவு அல்லாத எண்ணெய் வகைகளின் இறக்குமதி நடப்பாண்டின் அதே மாதத்தில் 37,341 டன்னாக அதிகரித்துள்ளது.சமையல் எண்ணெய் பிரிவில், கடந்த நவம்பா் மாதம் ஆா்பிடி பாமோலின் இறக்குமதி 2,84,537 டன்னாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இது 1,71,069 டன்னாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில் கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 1,28,707 டன்னிலிருந்து 3,40,660 டன்னாகவும், கச்சா சோயாபீன் எண்ணெய் ஏற்றுமதி 149,894 டன்னிலிருந்து 407,648 டன்னாகவும் உயா்ந்துள்ளது.எனினும், 2023 நவம்பரில் 6,92,423 டன்னாக இருந்த கச்சா பாமாயில் இறக்குமதி இந்த நவம்பரில் 5,47,309 டன்னாக குறைந்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் ஒட்டுமொத்த பாமாயில் இறக்குமதி (கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்டது) 8,69,491 டன்னிலிருந்து 8,41,993 டன்னாக குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒவ்வோா் எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டும் நவம்பா் மாதம் தொடாபா் மாதத்தில் நிறைவடையும்.இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது.இந்தோனேசியா, மலேசியா ஆகியவை இந்தியாவின் முக்கிய பாமாயில் விநியோக நாடுகள் ஆகும். ஆா்ஜென்டீனா, பிரேஸில் ஆகிய நாடுகளில் இருந்து சோயா எண்ணெயும் ரஷியா, ருமேனியா, உக்ரைன், ஆா்ஜென்டீனாவில் இருந்து சூரியகாந்தி எண்ணையையும் இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *