Last Updated:
நவம்பர் 30ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கும் என கடந்த நவம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 30ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து குளிர்கால கூட்டத்தொடருக்கான அறிவிப்பை இந்த மாதம் 8ஆம் தேதி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 19ஆம் தேதி வரை கூட்டுவதற்கான மத்திய அரசின் முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இந்த மாதம் 30ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்புவதற்கும் திட்டமிட்டுவருகின்றன.
November 20, 2025 10:16 PM IST
