2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாடாளும் மக்கள் கட்சி எந்தவொரு தேர்தல் செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை. பிறகு, 2018-ம் ஆண்டு அரசியலுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க முடிவு செய்தார் கார்த்திக். அப்போது, “நாடாளும் மக்கள் கட்சி” புதிய வடிவத்தில் வரவிருக்கிறது. அதனுடைய சில பொறுப்பாளர்கள் மாற்றி அமைக்கப்படுவார்கள்” எனக் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, 2019-ம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக டிசம்பர் மாதம் ‘மனித உரிமைகள் காக்கும் கட்சி’ என புதியக் கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சி மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நலன், விவசாயம் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் எனத் தெரிவித்திருந்தார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடைய மனித உரிமைகள் காக்கும் கட்சி மூலமாக அதிமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாகக் கூறியிருந்தார்.

பிறகு அதிமுக-வுக்கு பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்து பிரச்சாரமும் செய்தார். அதைத் தொடர்ந்து 2021 சட்டமன்ற அதிமுக-பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாகத் தெரிவித்தவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
2018-ல் மனித உரிமைகள் காக்கும் கட்சியைத் தொடங்கிய பிறகு எந்தவொரு தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை. அக்கட்சியைத் தொடங்கிய பிறகு அதிமுக-வுக்கு ஆதரவாக மட்டுமே கார்த்திக் பிரச்சாரம் செய்தார். தற்போது உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் அரசியல், சினிமா என அனைத்திலிருந்தும் விலகி இருப்பதாகச் சொல்கிறார்கள்.!