இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.22,693.41 கோடியாக சரிந்துளளது.
இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி ரூ.21,08ாடியாக இருந்தது. 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 23.49 சதவீதம் சரிவாகும்.அந்த மாதத்தில் நாட்டின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி ரூ.26,268.6 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் வெட்டி மெருகூட்டப்பட்ட வைரத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 13.43 சதவீதம் சரிந்து ரூ.2,17,148.26 கோடியாக உள்ளது. 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.2,46,105.96 கோடியாக இருந்தது.கடந்த பிப்ரவரி மாதத்தில் வெட்டி மெருகூட்டப்பட்ட வைரத்தின் மொத்த ஏற்றுமதி 20.2 சதவீதம் சரிந்து ரூ.11,860.71 கோடியாக உள்ளது.
2024 பிப்ரவரியில் அது ரூ.14,164.1 கோடியாக இருந்தது.தங்க ஆபரணங்களின் மொத்த ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 18.09 சதவீதம் குறைந்து ரூ.6,549.46 கோடியாக உள்ளது. இது 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது ரூ.7,624.37 கோடியாக இருந்தது.2024 பிப்ரவரி மாதத்தில் ரூ.1,155.79 கோடியாக இருந்த ஆய்கவகத்தில் வளா்க்கப்பட்டு மெருகூட்டப்பட்ட வைரத்தின் ஏற்றுமதி நடப்பாண்டின் அதே மாதத்தில் ரூ.975.22 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.