புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணசாமி கூறுகையில், ‘‘புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு ஜனவரி 7-ம் தேதி மதுரையில் நடக்கிறது. தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. இதற்காக, திமுக அரசைக் கண்டித்து திருநெல்வேலியில் எனது தலைமையில் நவம்பர் 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’ என்றார்.
நவ.20-ல் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டம் | Krishnasamy protest on Nov 20
