திண்ணையில கிடந்தவனுக்குத் திடுக்குன்னு யோகம் அடிச்ச மாதிரி பழனிசாமிகிட்ட இந்த நாகரிகத்தை எதிர்பார்க்க முடியுமா? தமிழ்நாட்டு மக்கள் கொள்கையைப் பேசுவதைத்தான் ஆதரிப்பாங்களே தவிர, வாய்க்கொழுப்போடு பேசினால் அதை வரவேற்க மாட்டாங்க. 2011, 2016 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள்லயும் கொடுத்த வாக்குறுதிகளை அ.தி.மு.க நிறைவேற்றவில்லை.
அந்த வாக்குறுதிகளை நான் வாசித்தால் அது பழனிசாமிக்கு ஞாபகம் வராது. ஆனால், தி.மு.க வாக்கு கொடுத்தால் எப்படியாவது செய்து முடிப்போம். அப்படி இந்தத் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார்தான் தி.மு.க தேர்தல் அறிக்கை. ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகள் பெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இனி மாதம் 2000 ரூபாயாக வழங்கப்படும்.
புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு உதவித் தொகை இனி 1000-த்திலிருந்து மாசத்துக்கு 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் என எல்லா உதவித் தொகைகளும் டபுள் மடங்காக உயர்த்தி வழங்கப்பட இருக்கின்றன. தி.மு.க-வின் நட்சத்திரப் பரப்பரையாக 8000 ரூபாய் கூப்பன் மாறியிருக்கிறது. நாங்கள் சொன்னதைச் செய்வோம். ஏன், செய்வதைத் தான் சொல்வோம்.
தமிழ்நாட்டை எப்படிப்பட்ட ஆபத்து சூழ்ந்திருக்கிறது என நான் சொல்லியிருக்கிறேன். இதிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேணும் என்றால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடர்ந்தாகணும். தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா? இது தர்ம யுத்தம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
அமையவிருக்கக் கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கக் கூடிய வகையான ஒரு ஆட்சியை வழங்குவோம்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “இல்லத்தரசி கூப்பன் அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் ரொம்ப பிரமாதமான வரவேற்பு இருக்கிறது. தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் இல்லத்தரசி திட்டம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
நாங்கள் பெரும்பாலான தொகுதியில் ஜெயிக்க மாட்டோம் எதிர்கட்சிகள் என சொல்வதாக நீங்கள் கேட்கிறீர்கள். அதனால் தான், தோல்வி பயத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இப்போது தரக்குறைவாகப் பேசி வருகிறார்” என்றார்.