வானிலை காரணமாக நாகை – இலங்கை கப்பல் சேவை ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை துறைமுகம் – இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் (சிவகங்கை) போக்குவரத்து கடந்த ஆக.16-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால், நாள்தோறும் நாகை துறைமுகத்திலிருந்து இயக்கப்படுவதாக இருந்த இந்த கப்பல் வாரத்தில் 3 நாள்கள் மட்டும் இயக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் இயக்கப்பட்டது.
இந்த சேவை எவ்வித இடையூறின்றி நடைபெற்ற நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று செப். 21-முதல் சனிக்கிழமைகளிலும் கப்பல் இயக்கப்பட்டது.
இதையும் படிக்க: தில்லி புதிய மேயராக மகேஷ் குமார் கிச்சி தேர்வு!
இதற்கிடையே, பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், நவம்பா் 2-ஆவது வாரத்திலிருந்து 5 நாள்கள் கப்பலை இயக்கப்படும் என்றும், செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வானிலை காரணமாக நாகை – இலங்கை கப்பல் சேவை நவ. 19 முதல் டிச. 18 வரை கப்பல் நிறுத்தப்படும் என்றும், நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இரு பகுதிகளிலும் பயணிகளின் வசதிக்காக நவ. 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்று கப்பல் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், டிச. 18-க்குப் பிறகு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.