நாகை: கொலை மிரட்டல் விடுத்த தவெக மாவட்டச் செயலாளர்! – தந்தை மகன் மீது வழக்கு பதிவு | tvk nagai district Secretary was booked in a case

Spread the love

மேலும், `தலையை வெட்டி ரோட்டில் வீசுவேன், உன்னை பொதுச்செயலாளர்கிட்ட அழைத்து சென்ற அலெக்ஸை கால்களை தேர்தல் முடிஞ்சதும் வெட்டுவேன்’ என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது உடன் இருந்த சுகுமாரன் மகன் ரொனால்டோ, `என் அப்பாவை பற்றி பேசினால் எதை பற்றியும் யோசிக்க மாட்டேன். கல்லை கட்டி கடலில் போட்டு விடுவேனு’ மிரட்டியுள்ளாராம். இது குறித்து வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இது குறித்து நாகேந்திரன், நேற்று நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, `ஒரு மாதத்திற்கு முன்பு என்னை சந்திக்க வந்த போது இந்த வீடியோவை எடுத்துள்ளனர். அதில் உள்ளது என் குரல் இல்லை, நான் பேசியது போல் எடிட்டிங் செய்து வெளியிட்டுள்ளனர். தேர்தல் வருகிறது என்பதால் காழ்ப்புணர்சியில் ஒரு மாதத்திற்கு பிறகு இதை செய்திருப்பதாக’ சுகுமாரன் வீடியோ குறித்து மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், வெளிப்பாளையம் காவல் நிலைய போலீஸார் சுகுமாரன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது மகன் ரொனால்டோ மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *