டெல்லியில் இன்று (பிப்.10) காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ தொகுதி பங்கீடு குறித்து பேச முதல்வர் ஸ்டாலின் உடனே குழுவை அமைக்க வேண்டும்.
விரைவில் தேர்தல் உடன்பாட்டை முடிக்க வேண்டும். பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை செய்ய எங்களுக்கு உரிய நேரம் தேவை.
கடைசி நேரத்தில் அறிவித்தால் குழப்பம் தான் வரும்.

பிஹார், ராஜஸ்தான், மாராட்டியத்தில் கடைசி நேரத்தில் முடிவெடுத்ததால் தான் சங்கடமானது.
இந்த அனுபவங்களை வைத்து முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.
திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும்.