“நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம்”- எடப்பாடி பழனிசாமி| edappaadi palanisamy about nanguneri issue

Spread the love

நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.

6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இந்தக் கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய விடியா திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள்.

இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அச்சத்துடன் போராடி வருகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *