“நாங்க விசிலடிச்சு கொண்டாடின நடிகர் பிரசாந்தை!” – விஷால் கலகல! |”We whistled and cheered for actor Prashanth!” – Vishal, in high spirits!

Spread the love

நடிகர் விஷால் பேசுகையில், “ஒரு நாள்ல ஒரே இடத்துல ரெண்டு பாசிடிவ்வான விஷயம் நடக்கிறதுல ரொம்பவே சந்தோஷம்.

நான் உதவி இயக்குநராக இருந்தப்போ, பிரசாந்தோட படங்களை வியந்து பார்த்திருக்கேன்.

நாங்க விசிலடிச்சு கொண்டாடின நடிகர் இவர். அப்போ எங்க பக்கத்துல இருக்கிற பெண்களெல்லாம் பிரசாந்தை சைட் அடிப்பாங்க.

அதையெல்லாம் பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாக இருக்கும். தொடர்ந்து சில்வர் ஜூப்ளி கொடுத்துட்டு இருப்பார்.

நடிகர் விஷால்

நடிகர் விஷால்

தியாகராஜன் சாருடைய விஷன்தான், இன்னைக்கும் பிரசாந்தை இவ்வளவு பெரிய உயரத்துல நிக்க வச்சிருக்கு.

என்னுடைய அப்பா என்கிட்ட ‘தியாகராஜன் சார் எப்படி அவருடைய பையனை கொண்டு வருகிறாரோ, அப்படி நான் உன்னை சினிமாவுக்குள்ள கூட்டி வருவேன்’னு தியாகராஜன் சாரை எடுத்துக்காட்டாக சொல்லுவார்.

வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் தேவயாணி மேம் அத்தனை பரிச்சயம். அவருடைய லெகசியை தொடர்வதற்கு ப்ரியங்காவிற்கு பொறுப்புகள் இருக்கு.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *