நாடாளுமன்றத்தில் அசாம் மக்களின் வீரர்களாக நிற்போம்: ராகுல் காந்தி

Dinamani2f2024 072fafc7353e 4200 4e23 Ae7a 58e96974e22f2fassam Rahul.jpg
Spread the love

சில்சார்: அசாம் மக்களுக்காக துணைநிற்போம், நாடாளுமன்றத்தில் அவர்களின் வீரர்களாக நின்று குரல்கொடுப்போம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று மத்திய அரசையும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

அசாம் மாநிலம் சாசர் மாவட்டத்தில அமைந்துள்ள வெள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை இன்று ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசினார். அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

“நான் அசாம் மக்களுடன் துணை நிற்கிறேன், நான் நாடாளுமன்றத்தில் அவர்களின் ராணுவ வீரராக நின்று குரல்கொடுப்பேன். மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் ஆதரவையும் விரைவாக வழங்குமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று ராகுல் தன்னுடைய ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் ஃபுலெர்டலில் உள்ள வெள்ள நிவாரண முகாமை பார்வையிட்ட பிறகு பதிவிட்டுள்ளார்.

அசாம் மாநிலத்துக்கு ‘விரிவான மற்றும் கருணையுள்ளத்தோடு நிவாரணம வழங்கவும், குறுகிய காலத்தில் மறுவாழ்வு மற்றும் இழப்பீடு அளிப்பதோடு, ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்தையும் செய்ய வடகிழக்கு நீர் மேலாண்மை ஆணையம்’ தேவை என்றும் ராகுல் கூறியுள்ளார்.

தில்லியில் இருந்து அசாமின் சில்சாருக்கு இன்று காலை விமானம் மூலம் வந்தடைந்த ராகுல், அங்கிருந்து வெள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று மக்களை நேரில் சந்தித்துப் பேசினார்.

பிறகு, மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்துக்குப் புறப்பட்டார். அங்குள்ள நிவாரண முகாம்களைப் பாா்வையிட்ட பின்னா், மீண்டும் சில்சாருக்கு வந்து, அங்கிருந்து இம்பாலுக்கு விமானத்தில் பயணிக்கவுள்ளாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *