கோடையின் தாக்கத்தால் ஏற்படும் வெப்பவாத பாதிப்பு மற்றும் இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளைமேட் டிரென்ட் ஆராய்ச்சிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த இந்தியா வெப்ப உச்சி மாநாடு 2025-ல், வெப்பத்தின் தீவிரத் தாக்கம் குறித்து மருத்துவ அமைச்சகத்தின் ஆலோசகர் செளமியா சுவாமிநாதன் பேசியதாவது,
”நாட்டில் வெப்பவாத பாதிப்புகளுக்கான தரவுகள் கடலில் உள்ள பனிப்பாறையின் நுனியைப் போன்றுதான் உள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து வலுவான தரவுகள் நாடு முழுவதுமே இல்லை.
இறப்பு சார்ந்த தரவுகளைச் சேகரிக்கும் அமைப்புகளைச் சீரமைத்து பரவலாக்க வேண்டும். ஏனெனில் தரவுகளே அரசுக்கான சிறந்த ஆதாரம்” எனக் குறிப்பிட்டார்.
வலுவான தரவுகள் இல்லாததால், வெப்பம் தொடர்பான இறப்புகளை இந்தியா பெரும்பாலும் குறைவாகக் கணக்கிடுகிறது என்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.