வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
தேர்தல் “: உங்கள் பார்வை என்ன? படித்தவுடன் மனசு 36 வருடங்களுக்கு முன்னோக்கிச் சென்றது…
வாக்காளர்கள்…
வாக்காளராக நம் கடமை என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா???
அரசியல்வாதியின் சூதாட்டத்தில் பகடைக்காய் இல்லை .
நாட்டை விற்க போகிறோமா? இல்லை..
நாட்டை வியக்க வைக்க போகிறோமா?
விடை, வினா.. இரண்டும் வாக்காளர் கையில்.
வாக்கு உரிமையாக!
‘மான்டெஸ்க்யூ’என்ற அறிஞர் ‘சட்டங்களின் ஆன்மா ‘என்ற நூலில் தன்னுடைய அரசை தானே தீர்மானிக்கும் எஜமானர்கள் வாக்காளர்கள் என்று பெருமையாக குறிப்பிடுகிறார். உண்மை .
பணம், இதர சலுகைகளை எதிர்பாராமல் நம் கையில் உள்ள வாக்கு என்ற மாபெரும் ஆயுதத்தைக் கொண்டு சாதி, மதம், இனம் பாராமல் இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டைக் கட்டமைக்க நாம் உறுதி மேற்கொள்வது அவசியம்.
நம் உரிமை , நம் ஓட்டு என்பதற்கிணங்க நாட்டையும், நம்மையும் ஆளக்கூடிய நபரை தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம் வாக்காளரான நமக்கு உண்டு. அதை உரிய வகையில் பயன்படுத்தினால் மட்டுமே நமக்கான நல்ல பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதில் தவறுகள் நிகழாது என்பதும் உறுதி.
நம் சிந்தனை 5 ஆண்டு காலம் நம்மை ஆளப்போகும் அரசியல் ஆளுமையை தேர்ந்தெடுப்பதில் இருக்க வேண்டியது அவசியம்.
பணம் செலவழித்தால் போதும் தேர்தலையும், வாக்காளர்களையும் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற மனநிலையும், செலவழித்த பணத்தை திரும்பப் பெற பல மடங்கு ஊழல் என்ற நிலையும் இங்கு சர்வசாதரணமாக உள்ளது.