ஸ்டார்ட்அப் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தவர்
நாணயம் விகடன் நடத்தும் “பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் 2026′ விழாவில், கொங்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவரும், எண்ணற்ற இளம் தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்பவருமான டி.வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு “பிசினஸ் மென்டார்” (Business Mentor) விருது வழங்கப்பட்டது.
இந்த விருதினை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு வழங்கி சிறப்பித்தார். மேலும், “கொங்கு மண்டலத்தில் எண்ணற்ற இளைஞர்களின் ஸ்டார்ட்அப் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தவர். பிசினஸ் மாடல், Vision, மற்றும் தொழிலை எப்படி பெரிதாக்குவது (Scalability) எனப் பல்வேறு உத்திகளைக் கற்றுத்தரும் `கைடிங் போர்ஸ்’ (Guiding Force) இவர்” என வாழ்த்தினார்.
விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய சி.டி.குமார், “சொத்து என்பது பணம் அல்ல; நண்பர்களே உண்மையான சொத்து. பவுன்சிங் போர்டு என்பது ஒருவருக்கு ஒருவர் கற்றுக்கொள்ளும் களம் (Peer Learning). ஈரோட்டில் மட்டும் இது போன்ற 100 போர்டுகளை உருவாக்க வேண்டும் என்பதே என் கனவு” என்று குறிப்பிட்டார்.