மேலும், அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர் தனது பணியை சரியாகச் செய்தாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கும் தோனி, “அவர் சிறந்த மனிதர். விளையாட்டைப் பற்றி சிறந்த அறிவைக் கொண்டவர். உலகின் மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களில் அவரும் ஒருவர்.
அவர் பயிற்சியாளராக வந்தபிறகுதான் நாங்கள் இரண்டு தொடர்களை இழந்துவிட்டோம் என்று எல்லாப் பழியும் அவர்மீது சொல்வதல்ல.
ஏனெனில் இறுதியில் வீரர்கள்தான் களத்தில் விளையாடப்போகிறார்கள்” என்று பயிற்சியாளரை நோக்கிய கேள்விக்கும் அவரே முன்னின்றார்.

தோனியின் இந்த ஸ்பீச்சை ரசிகர்களும், விமர்சகர்களும் தற்போது கம்பீரின் தற்பெருமை பேச்சோடு ஒப்பிட்டு, `அன்று இந்தியா மோசமாக தோற்றபோது கடந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்றதும் இதே தோனிதான் என்று பெருமை பேசவில்லை. அணியில் இருக்கும் சீனியர் வீரர்கள் யாரையும் குறை சொல்லவில்லை’ என்று கூறி வருகின்றனர்.
சொந்த மண்ணில் இந்தியாவின் இத்தகைய மோசமான தோல்விக்கு யார் தான் பொறுப்பேற்பது, தோல்வியின்போதும் கம்பீரின் தற்பெருமை அணுகுமுறை எத்தகையது? யார் தான் பதில் சொல்வது?