அதைத் தொடர்ந்து, காங்கிரஸின் உயர்மட்ட முடிவெடுக்கும் குழுவின் உறுப்பினரான பவன் கேரா, “கோட்சேயின் ஆதரவாளர்கள் காந்தியின் ஆதரவாளர்களாக இருக்க முடியாது” என்றார்.
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்,“ஆர்.எஸ்.எஸ் என்பது வெறுப்பால் ஆன ஒரு அமைப்பு. ஆர்.எஸ்.எஸ் வெறுப்பைப் பரப்புகிறது. அல்-கொய்தாவும் வெறுப்பால் ஆன ஒரு அமைப்புதான். அல்-கொய்தாவும் பயங்கரவாதத்தைப் பரப்புகிறது. ஆர்.எஸ்.எஸ்-இடமிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை. அல்-கொய்தா மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானவை” என்றார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஆர்.எஸ்.எஸ்-பாஜக கூட்டணியைப் போல காங்கிரஸ் ஒருபோதும் மத அரசியல் செய்வதில்லை. எங்களுக்கு அதிகாரம் குறைவாக இருக்கலாம், ஆனால் எங்கள் முதுகெலும்பு பலவீனமானதல்ல. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மதத்தின் பெயரால் வாக்குகள் கேட்பதில்லை. நாங்கள் மதத்தை நம்புகிறோம், ஆனால் சிலர் மதத்தை அரசியலாக மாற்றிவிட்டனர்.
பா.ஜ.க-விடம் அதிகாரம் இருக்கிறது, ஆனால் அவர்களிடம் உண்மை இல்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஒரு காலத்தில் மூவர்ணக் கொடியையும் வந்தே மாதரத்தையும் கூட ஏற்க மறுத்தவர்கள், இப்போது மக்களின் உரிமைகளை நசுக்குகிறார்கள். நாம் உறுதியாக நின்று இத்தகைய முயற்சிகளை எதிர்க்க வேண்டும்,” என்றார்.