நான் இசை தெய்வமல்ல, சாதாரண மனிதன்தான்: இளையராஜா

Dinamani2f2025 03 062frzk4xqkd2f5738london 0603chn 1.jpg
Spread the love

ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர், ஆனால் நான் சாதாரண மனிதன்தான் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உங்களின் ஆதரவு, வரவேற்புடன் சேர்த்து எனது வெற்றிக்கு இறைவன் அருள்புரிந்தான். முறையாக ஒத்திகை பார்த்து பின்னர் சிம்ஃபனி இசையை அரங்கேற்றினேன். ஒவ்வொரு தருணத்திலும் ரசிகர்கள் கைதட்டியதால் இசை கோர்ப்பாளரே ஆச்சரியமடைந்தார். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள நிகழ்ச்சி.

அரசு மரியாதையுடன் முதல்வர் என்னை வரவேற்றது மனம் நெகிழச் செய்தது. சிம்ஃபனியின் இரண்டாவது பிரிவில் எனது பாடல்களையும் வாசித்து, அதில் நானும் பாடினேன். எனது சிம்ஃபனி இசை துபை, பாரிஸ் உள்ளிட்ட 13 நாடுகளில் நடக்கவுள்ளது. ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர். நான் சாதாரண மனிதன்தான். பண்ணைபுரத்தில் இருந்து இன்றுவரை எனது கால்களில் நடந்து, எனது கால்களில்தான் நான் நிற்கிறேன்.

82 வயது ஆகிவிட்டதே என நினைக்க வேண்டாம், இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறேன். இவ்வாறு அவர் கூறினார். லண்டனில் தனது முதல் சிம்ஃபனி அரங்கேற்றத்துக்பின் திங்கள்கிழமை சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இளையராஜாவை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். பாஜக சார்பில் கரு.நாகராஜன், விசிக சார்பில் வன்னியரசு உள்ளிட்டோர் இளையராஜாவை வரவேற்றனர்.

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *