நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர்: கருணாநிதிக்கு நான் பந்து வீசி இருக்கிறேன். மலரும் நினைவுகளை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்  – Kumudam

Spread the love

அதில்,”Champion-ஓட True Strength பதக்கங்கள்ல மட்டும் இல்ல, அவங்ககிட்ட இருக்குற Discipline, Pressure-ஐ handle பண்ணுற விதம், விடாமுயற்சி இது எல்லாத்துலயும்தான் இருக்கு!

தமிழ்நாடு முழுக்க இருந்து வந்திருந்த நம்ம Young Athletes-கூட பேசினப்போ, அவங்களோட Clarity-ஐயும் Confidence-ஐயும் பார்த்து மிரண்டு போயிட்டேன். Next Level Focus!

 இவங்க வெறும் விளையாட்டை மட்டும் விளையாடல, நம்ம தமிழ்நாட்டோட Future Legacy-யை உருவாக்கிட்டு இருக்காங்க. இதனால்தான் நம்ம இளைஞர்கள் மேல எனக்கு எப்பவும் ஒரு தனி நம்பிக்கை உண்டு!” என்றார்.

மேலும் தந்தை கருணாநிதியுடன் தான் கிரிக்கெட் விளையாடிதை நினைவு கூர்ந்துள்ள அவர், கருணாநிதி பேட்டிங் செய்யும் போது நான் பெளலிங் செய்தத்தாகவும் அந்த வீடியோவில் தனது மலரும் நினைவுகளை முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்தள்ளார். 

மேலும், நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர்; கிரிக்கெட்டில் பைத்தியமாக இருந்திருக்கிறேன். பள்ளி புத்தகங்களை வைத்து கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். தற்போது வாய்ப்பு கிடைத்தால் கூட மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன்.

சினிமா பிரபலங்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டியில் நான் பங்கேற்று 3 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். கிரிக்கெட் வீரர் தோனியின் தலைமைப் பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும். தோனி தற்போதும் பல பேருக்கு பெரிய வழிகாட்டியாக இருக்கிறார். சிரித்த முகத்துடன் அமைதியாக டென்ஷன் இல்லாமல் தோனி கேப்டன்ஷிப் செய்வார்.

Champion-ஓட True Strength பதக்கங்கள்ல மட்டும் இல்ல, அவங்ககிட்ட இருக்குற Discipline, Pressure-ஐ handle பண்ணுற விதம், விடாமுயற்சி இது எல்லாத்துலயும்தான் இருக்கு! எனவும் தனது வீடியோவில் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *