‘நான் சரண்டர் ஆவதா’ கொதிக்கும் ராமதாஸ் டு திமுக-வுக்குத் தாவும் அதிமுக மாஜி மாண்புமிகு! | கழுகார் | Kazhugar updates on Vijay, Ramadoss and dmk politics

Spread the love

அடுத்தடுத்த டெல்லி படையெடுப்புகளுக்குப் பிறகும்கூட, சூரிய கட்சிக்கும், கதர்க் கட்சிக்கும் இடையே சுமுகமான உறவுநிலை இதுவரை உருவாகவில்லை.

இந்தச் சூழலில், சிட்டிங் கதர் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலர் மீது பவனுக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம் சூரியக் கட்சி. அதில், ‘எம்.எல்.ஏ-வாக இருக்கும் 11 கதர் புள்ளிகளின் செயல்பாடுகள் படுமோசமாக இருக்கின்றன.

அவர்களை மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வைத்தால், வெற்றிக்கு வாய்ப்பில்லை. அவர்களுக்கு சீட் கொடுப்பதாக இருந்தால், வேறு தொகுதியில் போட்டியிடச் சொல்லுங்கள்’ என்று கூறப்பட்டுள்ளதாம்.

கூட்டணி அமைவதற்கு முன்பாக கண்டிஷன்கள் பறந்து வந்திருப்பதால், சம்பந்தப்பட்ட அந்த 11 எம்.எல்.ஏ-க்களும் பொருமலில் இருக்கிறார்கள். ”டெல்லி வரைக்கும் போய் இந்தக் கூட்டணி தொடரணும்னு மேலிடத்துக்கிட்ட நாங்க பேசினதுக்கு நல்லா நன்றிக்கடன் செய்திருக்காங்க” என்று புலம்புகிறார்கள் அவர்களில் சிலர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *