“நான் சாய் தன்ஷிகாவிடம் பேசுவதைவிட கார்த்தியிடம்தான் அதிகமாகப் பேசுவேன்!” – விஷால் |” I talk more to karthi than i’m talking to my lover Sai Dhanshika!” – Vishal

Spread the love

நடிகர் கார்த்தியுடனான நட்பு குறித்து விஷால் பேசுகையில், “நான் சாய் தன்ஷிகாவிடம் பேசுவதைவிட கார்த்தியிடம்தான் அதிகமாகப் பேசுவேன். நான் ஒரு நாளைக்கு 6 முறையாவது அவனுக்கு கால் செய்வேன்.

அவனும் அவனுடைய மனைவியைவிட என்னிடம்தான் அதிகமாகப் பேசிட்டு இருப்பான்” என்றவர், “ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய பேர் வந்து ‘உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு’ சொல்வாங்க. ‘எதை வச்சு அதை முடிவு பண்ணினீங்க. திரையில பார்க்கிற விஷால் வேற’னு சொல்லிடுவேன். ஒரு பெண் என்னுடைய முகத்தை இரத்தத்துல வரைந்து எடுத்திட்டு வந்திருக்காங்க.

‘சிவபாதிகாரம்’ படப்பிடிப்பின்போது ஒரு பெண் திடீரென எனக்கு முத்தம் கொடுத்திட்டாங்க. நான் உடனே அவரிடம் ‘இப்படிச் செய்யாதீங்க’னு சொல்லிட்டேன்.

என்னுடைய புகழை யூஸ் பண்ணி எந்தப் பெண்ணையும் நான் தவறாகப் பயன்படுத்தினது கிடையாது. என்னைப் பற்றின வதந்திகளுக்கு நானே முற்றுப்புள்ளி வச்சிடுவேன். ‘மார்க் ஆண்டனி’ படத்துடைய கிளைமாக்ஸ்ல என்னை விமர்சித்த மாதிரி நான் விமர்சிப்பேன்.

அதுபோல எப்பவும் என்னையே நான் விமர்சிப்பேன். ஒரு முறை நான் சாப்பிடுறதுக்கு முன்னாடி கடவுளை வேண்டிக்கிட்ட விஷயத்திற்காக என்னை ட்ரோல் பண்ணினாங்க. அதனால அதையும் இப்போ நிறுத்திட்டேன்” எனக் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *