சன் டிவியில் “ஆடுகளம்’, ‘இலக்கியா’ கலைஞர் டிவியில் ‘கௌரி’ என ஒரே சமயத்தில் முன்று சீரியல்களில் நடித்து வந்த நடிகர் சதீஷ் சன் டிவி சீரியல்களில் இருந்து விலகியிருக்கிறார். ‘ஆடுகள’த்தில் சதீஷுக்குப் பதில் ‘சூப்பர் குட்’ கண்ணன் கமிட் ஆகியிருக்கிறார்.
‘என்ன நடந்ததாம்? சதீஷிடமே பேசினோம்.

”சீரியல்கள்ல ‘இவருக்குப் பதில் இவர்’னு வருமே, அந்த ஒரு சூழலை நான் விரும்பறதில்லை. ரொம்ப கஷ்டமா இருக்கும். எங்காவது ஒரு சில இடங்கள்லதான் ரெண்டு தரப்பும் விரும்பி அது நடக்கும். அதேபோல வம்படியா ஒருத்தருடைய நடவடிக்கையால அப்படியொரு சூழல் நிகழ்ந்தா அதை சப்போர்ட் செய்ய முடியாது. அது விதிவிலக்கு.
என்னைப் பொறுத்தவரை எனக்கு அப்படியொரு வாய்ப்பு வந்தா, முதல்ல வெளியில போற ஆர்ட்டிஸ்ட் கிட்டப் பேசுவேன். ஏதாவது சிக்கல்னா என்னால் முடிஞ்சளவு அந்தச் சிக்கலைச் சரி செய்து அதே ஆர்ட்டிஸ்ட் தொடர்வதற்கான முயற்சி செய்வேன். அதன் பிறகும் வேற நடிகர்தான் நடிச்சாகணும்னாதான் நான் அந்த கேரக்டரைப் பண்ண சம்மதிப்பேன்.
ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு உடல் நலனில் பிரச்னை வந்து அதனால சீரியல்ல தொடர முடியலனு எனக்கு அந்த வாய்ப்பு வர்ற போது தயாரிப்பாளர்கிட்ட நானே பேசுவேன்.