” நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார்”- டிடிவி தினகரன்| “Sengottaiyan believed that I would join the TVK alliance,” – TTV Dhinakaran

Spread the love

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி மதுரையில் இன்று (ஜன.27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

செங்கோட்டையன் குறித்து பேசிய அவர், ” நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார்.

செங்கோட்டையனும் பலமுறை டெல்லி சென்றார். டெல்லியில் இருந்தவர்கள் அவருடனும் பேசினார்கள்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

செங்கோட்டையன் – டிடிவி தினகரன்

நான் டெல்லி சென்றபோது கூட “செங்கோட்டையன் ஏன் தவெகவிற்கு சென்றார். நம்முடன் வந்து இணைந்துகொள்ள சொல்லுங்கள்’ என்று அங்கிருந்தவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

நான் இதை செங்கோட்டையனிடம் சொன்னேன். ஆனால் அவர் ‘நான் ஏற்கனவே தவெகவில் இணைந்து விட்டேன். என்னால் மீண்டும் அங்கு வரமுடியாது’ என்று சொன்னார்’ மூத்த அரசியல்வாதியான அவரை வற்புறுத்துவதெல்லாம் சரியான விஷயம் கிடையாது” என்றிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *