“நான் பேசிய விஷயம், பெரிய தாக்கத்தை உருவாக்கியிருப்பது மனநிறைவை தந்திருக்கு!” – டாக்டர் குமரேசன் |”What I talked about has made a big impact give me fullfillment!” – Dr. Kumaresan

Spread the love

அப்படியான உணர்வை என்கிட்ட வர்றவங்களுக்கு என்னைக்கும் நான் ஏற்படுத்திடமாட்டேன். நகரத்தில் மட்டுமில்ல, கிராமத்திலும் பெரிய பெரிய சிகிச்சைகளையும் சாத்தியப்படுத்திக் காட்டணும்ங்கிறதுதான் என்னுடைய கனவாக இருக்கு.

பணத்தினால என்றைக்கும் ஒரு சிகிச்சை தடைப்படவே கூடாது! சிகிச்சை முடிச்சிட்டு மருத்துவமனைகள்ல இருந்து மக்கள் போறப்போ, அவங்க முகத்துல ஒரு புன்னகையைப் பார்க்க முடியும். அந்த புன்னகை எனக்கு முழு திருப்தியையும் பேரானந்தத்தையும் கொடுக்கும்.” என்றார் உற்சாகத்துடன்.

தொடர்ந்து பேசியவர், “மருத்துவர், மருத்துவம் பார்க்க வர்றவங்களை தொட்டு பார்க்கணும். ஏன்னா, அந்த தொடுதல்ல அவங்களுக்குள்ள ஒரு நம்பிக்கை பிறக்கும்.

மருத்துவத்துல நம்பிக்கை என்பதும் 50 சதவீதம் முக்கியமானது. அந்த தொடுதல், நோய்கள் அத்தனையும் குணமாகிடும்ங்கிற எண்ணமும் அவங்களுக்குப் பிறக்கும். இன்னைக்கு அந்த தொடுதல் குறைவாகி இருப்பதற்கு நவீனமயமாக்கல் ஒரு காரணமாகச் சொல்லலாம்.

கொரோனாவுக்குப் பிறகு யாருக்காவது எதாவது தொற்று இருக்குமோனு, அதை நெறிமுறையாகவும் மாத்திட்டாங்க. பலரும் என்கிட்ட ‘குறைவான பணம் வாங்கி மருத்துவம் பார்க்கிறீங்க, இன்னும் கொஞ்சம் அதிகமாக பணம் வாங்கிக்கோங்க’னு சொல்லுவாங்க.

ஆனா, அவங்களுக்கு எப்போதும் தெளிவான ரிப்ளை கொடுத்திடுவேன். ‘இந்த விஷயத்துல நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கேன். என்னுடைய தாயாரின் மறைவு என்னை பாதிச்சது. நான் டிரஸ்ட் தொடங்கின நோக்கமும் வேற.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *