“நான் முதலமைச்சர் ஆன பிறகு கார் ஓட்டுவதை விட்டுவிட்டேன், ஆனால்.!”- நினைவுகளைப் பகிர்ந்துக்கொண்ட மு.க. ஸ்டாலின்| m.k stalin about car in Vibe With MKS video goes viral in the internet

Spread the love

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இளம் தலைமுறையினருடன் கலந்துரையாடும் ” Vibe With MKS’ என்ற நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி இருக்கிறது.

இதில் மு.க.ஸ்டாலின் கார் தொடர்பாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

சமீபத்தில் மு.க.ஸ்டாலின் வின்டேஜ் காரில் உலா வந்த வீடியோ வைரலானதைச் சுட்டிக்காட்டி மதன் கார்க்கி கேள்வி எழுப்பி இருந்தார். 

அப்போது நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்ட மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞர் ஒருமுறை சினிமாவுக்கு பாடல்கள் எழுதுவதற்காக பெங்களூருக்கு சென்றார். அவருடன் நானும் சென்றிருந்தேன். வுட்லேண்ட்ஸ் ஹோட்டலுக்கு சென்றிருந்தோம்.

அப்போது கலைஞர் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது டிரைவர் என்னை அழைத்துப் போய் எதிரே இருக்கும் கப்பன் பார்க்கில் ‘ஃபியட் செலக்ட்’ காரில் எனக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தார்.

நான் முதலமைச்சர் ஆன பிறகு கார் ஓட்டுவதை விட்டுவிட்டேன். தொல்காப்பிய பூங்காவுக்கு தினமும் நடைபயிற்சிக்குப் போவேன். அப்படி நடைபயிற்சி போகும்போது வண்டியை (கார்) எடுத்து வந்தார்கள். வண்டி நல்லா இருந்தது. சரி ஓட்டிப் பார்க்கலாம் என்று வீடு வரை ஓட்டிக்கொண்டு போனேன். பழைய கார் மேல் எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *