‘நான் முதல்வன்’ திட்டத்தில் 42 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி: துணை முதல்வர் உதயநிதி தகவல் | Udhayanidhi informs 42 lakh people to receive skill training under naan mudhalvan scheme

Spread the love

சென்னை: ‘​நான் முதல்​வன்’ திட்​டத்​தில் கடந்த 4 ஆண்​டு​களில் 42 லட்​சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், 3.30 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு ஏற்​படுத்​தப்​பட்​ட​தாக​வும் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகத்​தின் ‘வெற்றி நிச்​ச​யம்’ திட்​டத்​தின் மூலம் திறன் பயிற்சி பெற்​றவர்​களுக்கு சான்​றிதழ்​கள் மற்​றும் பணி நியமன ஆணை​கள் வழங்​கும் நிகழ்ச்சி சென்னை நந்​தனத்​தில் நேற்று நடை​பெற்​றது.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை வகித்து, 170 இளைஞர்​களுக்கு சான்​றிதழ்​கள், ஊக்​கத்​தொகைக்​கான காசோலை, பணி நியமன ஆணைகளை வழங்​கி​னார். தொடர்ந்து துணை முதல்வர் முன்​னிலை​யில், தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகம் மற்றும் பல்​வேறு நிறு​வனங்​களிடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

அதன்​படி, எல் அண்ட் டி, இந்​திய கடற்​படை, டிவிஎஸ், ஐஐடிஎம், டிக்ஸன் தொழில்​நுட்ப நிறு​வனம், ஜெர்​மன் கல்வி பயிற்சி நிறு​வனம் ஆகிய​வற்​றுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்கள் கையெழுத்​தாகின. மேலும், ஹெச்​.சி.எல் நிறு​வனத்​துடன் இணைந்து தூத்​துக்​குடி, விளாத்​தி​குளம் பகு​தி​யைச் சேர்ந்த 2,500 இளைஞர்​களுக்கு திறன் பயிற்சி அளிக்​க​வும் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

பின்​னர், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் மூலம் கடந்த 4 ஆண்​டு​களில் 42 லட்​சம் இளைஞர்​களுக்கு திறன் பயிற்சி வழங்​கப்​பட்​டுள்​ளது. 3.30 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. அதன் தொடர்ச்​சி​யாக தொடங்​கப்​பட்ட ‘வெற்றி நிச்​ச​யம்’ திட்​டம் மூலம் இன்​றைக்கு 60 ஆயிரம் இளைஞர்​கள் பயிற்சி பெற்று வரு​கின்​றனர்.

இத்​திட்​டத்​தின் மூலம், பள்​ளி, கல்​லூரி முடித்​தவர்​கள், இடைநின்​றவர்​கள், வேலை​யில் இருக்​கின்​றவர்​களுக்​கு திறன் பயிற்சி வழங்​கப்​பட்டு வரு​கிறது. இதைப் பயன்​படுத்தி இளைஞர்​கள் தங்​களது வாழ்க்​கையை உயர்த்​திக்​கொள்ள வேண்​டும். அதே​போல், திறன் மேம்​பாட்​டுக் கழகம் மூலம் ஆடை, நகைவடிவ​மைப்​பு, விவ​சா​யம் என 35 துறைகளில் பயிற்​சிகள் வழங்​கப்​படு​கின்​றன. இவற்​றின் மூல​மாக, பயிற்சி பெறக்​கூடிய​வர்​களில் 72 சதவீதம் பேர் சமூகத்​தின் பின்​தங்​கிய பிரிவைச் சேர்ந்​தவர்​கள் என்​பதும் குறிப்​பிடத்​தக்​கது.

தா​யு​மானவர் திட்​டம்: ‘தா​யு​மானவர்’ திட்​டத்​தின் பயனாளி​களுக்கு திறன் பயிற்சி கொடுப்​ப​தில் முன்​னுரிமை அளிக்​கும் வகை​யில், அரசு காப்​பகத்​தில்

இருக்​கக்​கூடிய ஆதர​வற்ற மாணவர்​களுக்​கும் அவர்​களு​டைய வேலை​வாய்ப்​புக்கு ஏற்​றார்​போல் பயிற்சி வழங்​கப்பட உள்​ளது. பயிற்சி அடிப்​படை​யில் அவர்​களுக்கு ரூ.12,000 ஊக்​கத்​தொகை​யும் வழங்​கப்​படும் என்றார். நிகழ்ச்சியில், சிறப்​புத்​திட்ட செய​லாக்​கத் துறை செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் பங்​கேற்​றனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *