நான் வயிறு எரிந்து செல்கிறேன்:உன் அரசியல் பயணம் முடிந்துவிட்டது : அன்புமணிக்கு ராமதாஸ் சாபம்  – Kumudam

Spread the love

கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் அக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

நான் சிந்திய வியர்வை வீணாகப் போய் விட்டது. பாட்டாளி மக்கள் கட்சியில் எனது உரிமையை யாராலும் பறிக்க முடியாது. எந்த சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாலும் பறிக்க முடியாது. டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். சூழ்ச்சியினால் அன்புமணி தன்னை தலைவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இது அனைவருக்கும் நன்றாக தெரியும்.

தேர்தல் கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டார். உண்மையை சொன்னாலும் தேர்தல் ஆணையத்திற்கு புரியவில்லை. ஏன் என்றால் பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள். பணம் தேர்தல் கமிஷன் வரைக்கும் சென்று விட்டது. ஆலமரத்தில் அமர்ந்து கோடாலி கொண்டு மரத்தை வெட்ட பார்க்கிறார். அது உன்னால் முடியாது. உன் அரசியல் பயணம் முடிந்து விட்டது. நான் வயிறு எரிந்து சொல்கிறேன். உன் அரசியல் பயணம் முடிவடைந்து விட்டது” என்று கண்ணீர் மல்க ராமதாஸ் பேசினார்.

அன்புமணியை ஜெயிலில் தள்ள வேண்டும்

கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள்:நான்

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். நீதிமன்றத்தை அவமதித்து, பொய் செய்தி தெரிவித்த அன்புமணியை ஜெயிலில் அடைக்க வேண்டும்.

போலி பத்திரம் தயாரித்து நிலத்தை அபகரிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். 46 ஆண்டு காலம் உழைத்து உருவாக்கிய கட்சியை திருடிவிட்டனர். இந்த அநீதிக்கு நிச்சயம் நீதி கிடைக்கும், மாம்பழம் சின்னம் மருத்துவர் ராமதாஸ் உடையது என நீதிமன்றம் விரைவில் சொல்லும்” என கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *